திருகோணாமலை சீனக் குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் டிப்பர் வாகனமொன்றும் முச்சக்கர வண்டியும் மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து இன்றையதினம்(10.04.2025) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, முச்சக்கர வண்டி சாரதி கவலைக்கிடமான நிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.