புன்னகை தரும் புதனில் உங்கள் ராசிபலன் எப்படி..!{9.4.2025}

 

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
அன்னையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினையாக்கும் என முயற்சியைக் கைவிடாது, முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம்.
ரிஷபம்
taurus-rishibum
அன்பு சகோதரர்களால் அதிக உதவி உண்டு. எடுத்த காரியங்கள் யாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். முகநூல் மூலம் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
மிதுனம்
gemini-mithunum
சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். நண்பர்களுடன் சுமுகமாக இருத்தல் அவசியம். கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. வண்டி, வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன், வேகத்தை குறைத்து விவேகமாக நடக்கவும்.
கன்னி
virgo-kanni
பெண்களால் தன லாபம் அடைவீர்கள். பிறருக்கு விருந்து உபசாரம் செய்து மகிழ்வார்கள். பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவர். மாணவர்களுக்கு கல்வியில், வியாபாரிகளுக்கு தொழிலில் வெற்றி கிட்டும்.
மகரம்
capricorn-magaram
சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை உயரும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும். பலவகைகளில் மனைவி மனமுவந்து உதவுவாள். காதலுக்கு மரியாதை ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புத்தாடை அணிகலன்கள் ஆகியவற்றை அணிவார், சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர் பால் நேசம் ஏற்படும்.தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள்.
சிம்மம்
leo-simmam
வாயை அடக்கி வம்புக்கு செல்லாதிருப்பது சுகம். பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.
துலாம்
libra-thulam
செயல்பாடுகளும் அனுகூலமாய் அமையும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும். வேண்டுதல்கள் நிறைவேறும். புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும்.
மீனம்
pisces-meenam
பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது.
தனுசு
sagittarius-thanusu
நியாயமாக நடக்க வேண்டிய நாள். கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் குழப்பம் ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகுவது. அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். அன்னதானம் போன்ற நற் காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள்
கும்பம்
aquarius-kumbam
தனவரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும். பெயரும் புகழும் ஓங்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்வு தரும்.

கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.