இந்தியா மற்ற நாடுகளை விடவும் வித்தியாசமானது, மற்ற நாடுகளில் எல்லாம் ஒரு மொழி அல்லது இரு மொழி இருக்கும்.. ஒரே மதம் பிரதானமாக இருக்கும். மதசார்ப்புள்ள நாடாகவும் இருக்கும். இனம் என்று பார்த்தாலும் ஒரே இனமாகவே இருக்கும். அல்லது ஒரு சில இனங்களுடன் இருக்கும். ஆனால் தற்போது இந்தியா அப்படி இல்லை..
பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் இன்றைக்கு இந்தியாவில் கணிசமான பெண்கள் அல்லது ஆண்கள் திருமணத்திற்கு பிந்தைய உறவை விரும்புகிறார்கள்.
கணவரை/ மனைவியை பிடிக்கவில்லை என்கிற நிலையில் வேறு ஒரு பெண்ணை நாடுகிறார்கள். ஆனால் முறைப்படி மனைவிக்கு விவாகரத்து வழங்குவது இல்லை..
இதனால் கள்ளக்காதல் விவகாரமாக இவை எல்லாம் மாறுகின்றன. திருமணத்தின்போது ஆணும், பெண்ணும் தனக்கு ஏற்ற துணையா என்பதை அறியாமல் பெரியோர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு கணவனை பிடிக்காமல் வேறு ஒருவரை நாடுகிறார்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இப்படி நாடுவது அதிகமாக உள்ளது.
இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு 40 சதவீத பெண்கள் புது உறவை தேடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பெங்களூர் 40% பெண்கள் புதிய உறவை விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் பெங்களூர் மாநகரம் முதலிடம் பிடித்திருப்பதாகவும், இதற்கு அடுத்தபடியாக மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக இந்திய கிராமங்களில் கள்ளக்காதல்களுக்கு, கணவன் அல்லது மனைவி கொடுமைக்கு ஆறுதல் கூறுவதாக வரும் நட்புகள் தான் ஆரம்ப புள்ளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல் சந்தேகப்படும் கணவன்களை கொண்டவர்கள் வெறுத்து போய் வேறு ஆணை நாடுகிறார்கள். அதேபோல் ஆணும் சந்தேகப்படும் மனைவியின் காரணமாக அவர்களது சந்தேகத்தை உறுதி செய்யும் வண்ணம் வேறு பெண்ணை நாடுவதாக கூறப்படுகிறது.
இதேபோல் கணவனை வெறுக்கும் மனைவிகள், மனைவியை வெறுக்கும் கணவன்கள், தனக்கான ஆறுதலான, தன் மேல் பிரியமான துணையை காணும்போது தங்களது குடும்ப சூழ்நிலை மறந்து கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். இதுதான் பல குற்றங்களுக்கு காரணமாகவும் உள்ளது.