முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியிலுள்ள மருந்தகமொன்றிற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.