பாங்காங்கில் நிலநடுக்கத்திற்கு மத்தியில், மருத்துவ ஊழியர்கள் தெருவில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, தாய், சேய் இருவரையும் காப்பாற்றிய சம்பவம் நெகிழச் செய்துள்ளது.
மியான்மரில் நேற்று ஏற்பட்ட இரு அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வானுயர கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,000க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
இந்த நில அதிர்வுகளால் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்த சம்பவம் உலக நாடுகளிடையே கவலையை அளித்திருந்தாலும், தற்போது நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.