அகலவத்தை பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 5 முறைப்பாடுகளும் ஒரு குற்றவியல் முறைப்பாடும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த முறைப்பாடுகள் மிரட்டல் மற்றும் தாக்குதல் முயற்சிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், வன்முறை செயற்பாடுகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள காவல்நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
வீதி அமைக்கும் பணிகள் , இரத்ததான நிலையங்களில் கட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் உடைகள் அணிதல், வாகனங்களில் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி விளம்பரங்களை ஒட்டுதல் ,சட்டவிரோத தேர்தல் பிரசார அலுவலகங்களை பராமரித்தல் போன்ற முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.