"இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எமக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் அதைவிட சிறப்பான ஆணையை மக்கள் எமக்கு வழங்குவார்கள்."
- இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.
"நாட்டையும், நாட்டு மக்களையும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாம் செல்லும் வழியே உறுதியான வழியாக உள்ளது. எனவே, அந்தத் திசையை மக்கள் மாற்ற மாட்டார்கள். கடந்த தேர்தல்களின்போது எமக்கு வாக்களிக்காதவர்கள்கூட இம்முறை ஆணை வழங்குவார்கள்." - என்றும் அவர் கூறினார்.
திஸ்ஸமஹாராம பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
"கிராமத்துக்குரிய அரசியல் தலைமைத்துவம்தான் பிரதேச சபை. அதன் அதிகாரமும் அரசு வசம் இருந்தால் திட்டங்களைச் சிறப்பாகச் செய்ய முடியும்." - என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.