கொழும்பு Lady Ridgeway குழந்தைகளுக்கான வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க பகிரப்படும் உதவி கோரல்:
யாழ்- காரைநகரைச் சேர்ந்த மிகவும் வறிய குடும்பப் பின்னணியைக் கொண்ட 13 வயதான சிறுவன் அப்லாஸ்டிக் அனீமியா என்னும் என்பு மச்சை செயலிழப்பு (செங்குருதி, வெண் குருதி, குருதி சிறு தட்டு உற்பத்தி பாதிப்படையும்) அரிய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதனால் அவருக்கு அவசரமாக எலும்பு மஜ்ஜை மாற்று சத்திரசிகிச்சை செய்தாகவேண்டிய கட்டாயம். அரச வைத்தியசாலையில் இதனைச் செய்யத் தேவையான வசதியும் திறனும் போதாமையால்- தனியார் வைத்தியசாலையில் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
(Lack of Expertise to perform matched unrelated donor transplants as this is a life-saving procedure)
அவசரமாகச் செய்யவேண்டிய இந்த எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சைக்காக பண உதவியை எதிர்பார்த்து இருக்கிறார்கள் குடும்பத்தினர்.
ஒருகோடியே நாப்பது லட்சம் ரூபாய்கள் செலவாகுமென ஆசிறி வைத்தியசாலை சொல்லியிருக்கிறது. உதவி செய்ய முடிந்தால் உதவுங்கள் 🙏
அல்லது பகிர்ந்தாவது விடுங்கள்..!