கண்டி - மஹியங்கனை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கண்டி - மஹியங்கனை வீதி இன்று மாலை 6 மணி முதல் மூடப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
வீதிக்கு அருகில் பாறைகள் விழும் அபாயம் காணப்படுவதால் கஹடகொல்ல பகுதியில் 44- 1 கிலோமீற்றர் தூண் அருகே வீதி மூடப்படுவதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.