சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் முதல் கட்டம் 2025 – 2027 ஆண்டுக்குள் செயல்படுத்தப்படுவதோடு இதற்காக, குறைந்த வருமானம் பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் துணை நிறுவனங்களின் அரச அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் நாடளாவிய ரீதியிலான வேலை திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.