கொவிட் 19 தொற்று அறிகுறிக்கு ஒத்த அறிகுறிகளுடன் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் எனப்படும் எச்எம்பிவி வகை வைரஸ் காய்ச்சல் பரவுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொவிட் 19 தொற்று ஏற்பட்டு 5 வருடங்களின் பின்னர் இந்த வகை வைரஸ் விரைவாகப் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றினால் சீனாவில் பல வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிரம்பியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இதனிடைஅயே சீனாவில் கடந்த 28 ஆம் திகதி முதல் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்த வகை தொற்று தொடர்பில் சீனாவில் சுகாதாரத் தரப்பினர் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.