2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் வரி வருமானம் 25.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 2023 ஆம் ஆண்டில் 1.56 ரில்லியன் ரூபா வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டில் 1.95 ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் வருமான வரியாக 112.1 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளதுடன் வற் வரியினுடாக 245.5 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.