கோப்பையுடன் இலட்சங்களை அள்ளிய முத்துக்குமரன்

 பிக்பாஸ் 105 நாட்களை வெற்றிகரமாக கடந்து டைட்டிலை வென்றுள்ளார் முத்துக்குமரன்.

தன்னுடைய பேச்சுத் திறமையால் ஆடியன்ஸின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு டாஸ்க்கிலும் இவருடைய பங்களிப்பு நிச்சயம் வித்தியாசமானதாக தான் இருக்கும். அதுவே வீட்டுக்குள் சில சண்டைகளுக்கும் காரணமாக அமைந்தது.

ஆனாலும் இறுதிவரை கேலி கிண்டல் அவமானம் பொறாமை அனைத்தையும் கடந்து திறமையான போட்டியாளராக இவர் முன்னேறினார். தனக்கு போட்டியாக இருக்கும் ஒவ்வொருவரையும் சரியாக காய் நகர்த்தி வீழ்த்தியும் இருக்கிறார்.

இது விமர்சனமாக மாறினாலும் இந்த விளையாட்டிற்கு இது சரியானது தான். அதனாலேயே அவருக்கு நாளடைவில் ரசிகர்கள் மட்டுமின்றி வாக்குகளும் குவிய தொடங்கியது.

அதன்படி தற்போது இந்த சீசன் டைட்டிலை வென்றுள்ள இவர் 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகையையும் கைப்பற்றியுள்ளார். அது மட்டும் இன்றி ஒரு நாளைக்கு இவருக்கு 10,000 சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

அப்படி என்றால் 105 நாட்கள் அவர் வீட்டில் இருந்துள்ளார். அதை வைத்து பார்க்கும் போது இவருடைய சம்பளம் 10 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இது தவிர 50,000 பணப்பெட்டியை கைப்பற்றியுள்ளார்.

ஆக மொத்தம் இவர் பிக்பாஸ் மூலம் 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார்


கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.