தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்

scholorship exam results 2024

 2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்  கடந்த 8 ஆம் திகதி 64 மையங்களில் ஆரம்பமான நிலையில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான முதலாம் விடைத்தாளல் 3 வினாக்கள் வெளியானதாக சர்ச்சை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வினாத்தாள் மதிப்பீடு மற்றும் முடிவுகளை வெளியிடுவதை நிறுத்தி உச்ச நீதிமன்றம் நவம்பர் 18ஆம் திகதி இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது.

செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலமாக 244,092 மாணவர்களும் தமிழ் மொழி மூலமாக 79,787 மாணவர்களும் என  மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.