கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று முற்பகல் கைது செய்யப்பட்டார்.அயலவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் மிரிஹான பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கராஜபக்சர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயலவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாம் இணைப்பு