காலைக் கோப்பி ஆயுளை நீடிக்குமா?

morning coffee extends life?

 காலையில் கோப்பி அருந்தும் பழக்கம் ஆயுளை நீடிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் காலைக் கோப்பி உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் மற்றைய நேரங்களில் அருந்தும் கோப்பியிலும் பார்க்க காலையில் அருந்தும் கோப்பிக்கே ஆயுளை அதிகரிக்கும் ஆற்றல் இருப்பதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அமரிக்காவின் லூஸியானா மாநிலத்திலுள்ள ரூலெய்ன் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. 1999 மற்றும் 2018 ஆண்ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கோப்பி அருந்தாதவர்கள், காலையில் மாத்திரம் கோப்பி அருந்துபவர்கள் மற்றும் நாள் முழுவதும் கோப்பி அருந்துபவர்கள் என 2 முறையில் கோப்பி அருந்தும் பழக்கம் உடையவர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் அதிகாலை 4 மணி முதல் முற்பகலுக்கிடையில் கோப்பி அருந்தும் பழக்கம் உடையவர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 16 சதவீத்ததால் குறைவாகக் காணப்பட்டுள்ளது. இருப்பினும் கோப்பி அருந்தாதவர்களுடன் ஒப்பிடும் போது கோப்பி அருந்துபவர்களுக்கு இதய நோயால் உயிரிழப்பதற்கான சாத்தியக்கூறுகள் 31 சதவீதம் காணப்படுகின்றமையும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 




கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.