கொழும்பின் சில பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கிணங்க கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை (16) மாலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 6.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது