யாழில் பாடசாலை மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்கள்-எங்கே போகுது மாணவர்கள் எதிர்காலம்

யாழில் பாடசாலை மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய  மாணவர்கள்-எங்கே போகுது மாணவர்கள் எதிர்காலம்

சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்து, அவற்றைச் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்த குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுத்துறைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, தற்போது சாதாரண தரப் பரீட்சை எழுதிய ஆறு மாணவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகப் பாடசாலை அதிபரினால் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டுக்கு அமைய, முதற்கட்டமாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 17 வயதுடைய குறித்த மூன்று மாணவர்களும் செவ்வாய்க்கிழமை (28) அன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது வழக்கை விசாரித்த நீதவான் பொன்னுத்துரை கிருஷாந்தன் என்ற மாணவர்களை புதன்கிழமை (29) வரை அச்சுவேலி பகுதியில் உள்ள’சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில்’ (தடுப்புக்காவல் இல்லம்) தடுத்து வைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டியுள்ளதாகப் பொலிஸார் நீதவானின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *