பயாகல பகுதியில் நபர் ஒருவர் தலையில் தடி ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
பயாகல, விகாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று சித்திரை புத்தாண்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபான விருந்தின் போது, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இக்கொலை நடந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம் அநுராதபுரம், நுவரவெவ குளத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
