இன்று ஏப்ரல் 17, 2026 வெள்ளிக் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 04ம் தேதி, மீனம், மேஷ ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று மீனத்திலும், மேஷ ராசியிலும் 3 கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. இன்று சிம்ம ராசியில் உள்ள பூரம் பின்பு உத்திரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சர்வ அமாவாசை.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடம் சில கருத்து வேறுபாடுகளால் மனக்கஷ்டம் ஏற்படலாம். மாலை நேரத்தில் உங்கள் மனநிலை பதட்டத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடையும். காதல் விவகாரத்தில் சூழல் சாதகம் அற்றதாக இருக்கும். இன்று நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய குறுக்கு வழிகளை, புத்திசாலித்தனமாக செயல்படவும். இது நீண்ட காலம் வெற்றிக்கு வழி வகுக்கும். புத்திசாலித்தனமான நிதி சேமிப்பு முறைகளை பின்பற்றவும்.சிலருக்கு திடீர் பணம் ஆதாயம் உருவாகும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மற்றும் குடும்ப பொறுப்புக்கள் சார்ந்த விஷயங்களை செய்து முடிப்பதில் வெற்றியடையவர்கள். நேரத்தை சரியாக நிர்வகிக்க முடியும். உங்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவ முன் வருவார்கள். இருப்பினும் பிறரை கண்மூடித்தனமாக நம்புவது சில இடர்பாடுகளை தரக்கூடியதாக அமையும். உங்கள் வரவு செலவு திட்டங்களை பராமரிப்பது, உங்கள் பொருளாதார நிலையை முன்னேற்ற உதவும். உங்கள் வேலையில் பேச்சை விட செயல்பாடுகளில் அக்கறையுடன் செயல்படவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய தொழில் அல்லது பணியில் மாற்றங்களை செய்ய முயற்சிகள் எடுப்பீர்கள். இன்று உங்கள் சூழல் மூலமாக சாதகமாக இருக்காது. அதனால் புதிய முயற்சிகள் மற்றும் முதலீடுகள் செய்வதில் தனது கடைபிடிக்கவும். முடிந்தவரை தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கை துணை இடம் இருந்து கிடைக்கும் ஆலோசனை நல்ல பலனை தரும். உங்கள் பிள்ளைகள் தொடர்பான ஏதேனும் முடிவு செய்யும் குடும்பத்தினரின் ஆலோசனை பெறுவது நல்லது. இன்று உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு முன் சூழலை சரியாக புரிந்து கொண்டு பேசவும்.
கடகம் ராசி பலன்
கடகம் ராசி அன்பர்களுக்கு இன்று, உங்களுடைய புதிய திட்டம் அல்லது செயல்பாடுகள் பிறரின் கவனத்தை ஈர்க்கும். எந்த துறையில் இருந்தாலும் அதில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். உங்கள் பழைய நண்பர்கள் சிலரிடமிருந்து நிதி உதவி கிடைக்கும். சிலருக்கு உதவி செய்வது அல்லது முன்னர் நீங்கள் செய்த முதலீடுகளும் மூலம் நிதி ரீதியான நன்மைகள் ஏற்படும். கடந்த காலத்தில் நிலுவையில் இருந்த வேலைகளை முடிக்க முடியும். பணியிடத்தில் உங்கள் திறனை வெளிப்படுத்தவும், யோசனைகளை வைக்கவும் முடியும். இது உங்கள் மேலதிகாரிகளை கவரும்.
சிம்மம் ராசி பலன்
சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று சுற்றுலா, வேலை அல்லது கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். நீண்ட நாட்களாக செய்து முடிக்க நினைத்த வேலையை முடிக்க முடியும். இன்று முக்கிய முதலீடு அல்லது முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. இன்று உங்களுடைய வேலை பல அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இருப்பினும் அவசரம் மற்றும் பதற்றத்தை தவிர்க்க வேண்டியது அவசியம். பணம் தொடர்பான விஷயங்களில் பாதுகாப்பான அணுகுமுறையை கடைபிடிக்கவும். இன்று கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் ஒரு சில முக்கியமான விஷயத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக செயல்படுவீர்கள். பிறரை சார்ந்து இருப்பீர்கள். பயணம் அல்லது ஏதேனும் அவசியமான பொருட்களை வாங்கும் விஷயத்தை நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. சில விஷயங்கள் வேகமாக நிறைவேறியது போன்ற தோன்றும். இன்று முதலீடு மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இன்று நீங்கள் சில உண்மையாக விஷயங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். பேசும்போது, கருத்துக்களை ஆராய்ந்து வெளிப்படுத்துவது நல்லது.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகப் பயணம் அல்லது புனித யாத்திரைக்கான திட்டங்கள் இன்று வகுக்கப்படலாம். இன்று உங்கள் நண்பர்களுக்காக பண உதவி அல்லது இது ஏற்பாடுகளை செய்ய வேண்டியது இருக்கும். போட்டி தேர்வுக்கு தயாராக கூடிய நபர்கள் கடின உழைப்பு தெரிவிக்கவும். இன்று வீட்டு பணியை மற்றும் வேலை தொடர்பாக முறையாக ஒழுங்கமைத்து செயல்பட வேண்டியது அவசியம். குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களுடன் சில முரண்பாடு அல்லது வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு தொழில் அல்லது வேலை சார்ந்த வாய்ப்புகள் உருவாகும் அவற்றை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடிகள் எதுவும் ஏற்படாது. சிறிய அளவில் கடன் அல்லது வேலைகளை முடிப்பது என அலைச்சலை சந்திக்க நேரிடும். உங்கள் குடும்பத்தினரின் தேவை இல்லை மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்ய முயற்சி எடுப்பீர்கள். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வணிகம், முதலீடு செய்யும் நிலையில் கவனம் தேவை. சரியான ஆலோசனைக்கு பின்னரே செயல்படுவது நல்லது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் சில முக்கிய நபர் என்ன உடல் நலக்குறைவு மன வருத்தத்தை தரும். இன்று கூட்டு வணிகம், வேலைகளை நிர்வகிப்பது போன்ற விஷயங்களில் உங்கள் பங்குதாரருடன் மாறுபட்ட அணுகுமுறையே மேற்கொள்வீர்கள். எந்தவித நிதி இரண்டு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். பணியிடத்தில் சில நெருக்கடியை சந்திக்க வாய்ப்பு உண்டு. கடினமான சிக்கலான வேலைகள் உங்களுக்கு ஒதுக்கப்படலாம். இன்று உங்கள் வார்த்தைகளை விட செயல்கள் அதிக தாக்குதல் ஏற்படுத்தும்.
மகரம் ராசி பலன்
மகரம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல் பலவீனமாகவும், நாம் சோர்வாகவும் இருக்கும். இன்றைய பொழுது உடற்பயிற்சி, யோகா போன்ற விஷயங்களுடன் தொடங்குவது நல்லது. குடும்ப உறுப்பினர்களானது பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். ஆடைகள் அல்லது ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டியவர்கள். இன்று பணியிடத்தில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பை கடைபிடிப்பது நல்லது. நிதி சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பதும், புத்திசாலித்தனமாக முடிவு எடுப்பது.க்கீரனின் அமைப்பு உங்களுடைய முதலீடு தொடர்பான ஆசையை தூண்டும். அதனால் நிதானம் தேவை.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணியிடத்தில் சூழல் மேம்படும். கடுமையான பணிகளை கூட கவனமாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் அல்லது மேலாளர்கள் நடத்தக்கூடிய விருந்து, விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு. உங்கள் வரவு செலவு திட்டத்தை கவனமாக கையாள்வது நல்லது. உங்கள் வேலையில் காட்டக்கூடிய நுணுக்கமான செயல்பாடு முன்னேற்றத்தை தரும். உங்கள் வேலையில் முக்கியத்துவம் வாய்ந்த சில ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் சில தொழில்நுட்ப சிக்கலை சந்திக்க வாய்ப்பு உண்டு. இதனால் வேலைகள் தாமதப்படுத்தலாம்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று சற்று மோசமான மனநிலையில் இருப்பீர்கள். நேரம் சில விஷயங்கள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். திருமண வாழ்க்கையானது காதல் உறவுகள் உங்களை காயப்படுத்த வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணையின் நம்பிக்கையை மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படவும். சில அத்தியாவசியமான செலவுகள் ஏற்படும். பெரியவர்கள் ஆதரவு உங்களுடைய நிலைமை ஓரளவு மேம்படுத்த வாய்ப்பு உண்டு. வேலையை வரைமுறை படுத்துவதும், செலவு கணக்குகளை ஒழுங்காக பராமரிப்பதும் நல்லது.
