Posts

யாழில் இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு – பொலிஸார் தீவிர விசாரணை!

 


யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (01.11.2026) இடம்பெற்றுள்ளது.

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment