குழந்தை மீதான தாக்க-தல் காணொளி, பெண் -து!

 




சமூக ஊடகங்களில் குழந்தையொன்று தாக்கப்படுவதைக் காட்டும் காணொளி பரவியதைத் தொடர்ந்து, பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று (31) குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, எண்டேரமுல்ல காவல் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து, அதே நாளில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் குழந்தையும் காவல்துறையினரால் பாதுகாப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

கைது செய்யப்பட்ட பெண்ணும் குழந்தையும் பின்னர் கருவாத்தோட்டம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணைகளின்போது, குறித்த தாக்குதல் சம்பவம் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவாத்தோட்டம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment