Posts

யாழில் பெரும் சோகம் – மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!

 


யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்து நேற்று (01) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம்

அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த சுவர் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை

உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment