2026ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என NSO தனியார் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று (05) நடைபெற்ற பங்குதாரர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திலேயே NSO நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்களில் தற்போது காணப்படும் நீர் இருப்பு மற்றும் எல் நினோ காலநிலை நிலைமைகளுக்கு மத்தியிலும் எதிர்பார்க்கப்படும் சராசரி அளவை விட அதிக மழைவீழ்ச்சி கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இந்த நிலைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த மூன்று மாத காலப்பகுதியில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தேவையில்லை என NSO நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
.jpg)