Posts

யாழில் தொடரும் உயிரிழப்புகள் – நண்பர்களுடன் சென்றவர் சடலமாக மீட்பு!

 


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் அளவெட்டி பகுதியில் உள்ள குளமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (02.11.2026) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அளவெட்டி பகுதியில் உள்ள குளமொன்றில் சடலம் மிதப்பதாக தெல்லிப்பழை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அளவெட்டி பகுதியில் திருமணம் முடித்து வசித்து வந்த குடும்பஸ்தர் எனத் தெரியவந்துள்ளது.

இவர் நேற்று (01.11.2026) ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் சிலருடன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். இந்நிலையில், இன்று குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment