நேற்று 04 ம் திகதி மதியம் முதல் பெய்த கனமழையால் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் சின்ன சோலங்கந்தை பகுதியில் உள்ள மண் திட்டுகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டு உள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபையின் அவ் வட்டாரத்திற்க்கு பொறுப்பான உறுப்பினர் திரு.இளங்கோவன் சம்பவ இடத்திற்கு விரைந்து அப் பகுதியில் ஏற்பட்ட மண் திட்டுகள் சரிவை பார்வை இட்டு சரிந்து விழுந்த மண் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் இதன் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டு உள்ளது இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.
மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் உடன் அப் பகுதிக்கு மண் திட்டுகளை அகற்ற டோசர் இயந்திரம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அப் பகுதியில் உள்ள இளைஞர்கள் இணைந்து மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அவ் வட்டாரத்திற்க்கு பொறுப்பான உறுப்பினர் இளங்கோவன் தெரிவித்தார்.
