அர்ச்சனாவுக்கு எதிரான கார் விபத்து வழக்கு ஒத்திவைப்பு! புதிய திகதி அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவுக்கு எதிரான கார் விபத்து வழக்கு, எதிர்வரும் 2027 ஜனவரி 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் திகதி ஒருகொடவத்தை – பேஸ்லைன் வீதியில் லசந்த அபேவர்தன என்பவரை கார் மூலம் மோதித் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி ஆஜராக முடியாத காரணத்தினால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment