விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி அரசின் அதிரடி அறிவிப்பு

விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபையின் ஊடாக, 60 வயதைப் பூர்த்தி செய்த 170,950 விவசாயிகளுக்கு மாதாந்தம் 415 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை ஓய்வூதியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 3,975 தபால் நிலையங்கள் ஊடாக இந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய, 2024ஆம் ஆண்டுக்கு முன்னர் குவிந்திருந்த விவசாய ஓய்வூதிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுக்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

குறைபாடுகள் இல்லாத விண்ணப்பங்களுக்கு ஒரு மாதத்திற்குள் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், முறையாகத் தவணைக் கட்டணங்களைச் செலுத்தாதவர்கள் மற்றும் 25 சதவீதத்திற்கும் அதிகமான தவணைக் கட்டணங்களைச் செலுத்திய பங்களிப்பாளர்களுக்கான நிகரத் தவணைக் கட்டணங்களைத் தயாரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 2014 ஜனவரி முதலாம் திகதி முதல் 60 வயதைப் பூர்த்தி செய்த விவசாயிகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலுவை ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கையும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலுவைக் கொடுப்பனவுகள் திறைசேரியால் ஒதுக்கப்படும் நிதி ஏற்பாடுகளுக்கு அமைவாக வழங்கப்படவுள்ளன.

Post a Comment