யாழ்ப்பாணம்- உடுப்பிட்டி சந்தையில் பழுதடைந்த மீன்களை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் பழுதடைந்த மீன்களை விற்பனை செய்வதாக மக்கள் முறைப்பாடு அளித்தனர்.
முறைப்பாடுகளை தொடர்ந்து (31.10.2026) அதிரடியாக தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களால் திடீர் பரிசோதனை மேற்கோள்ளப்பட்டது.
இதன் போது நான்கு வியாபாரிகளிடம் இருந்து 30 கிலோ வரையான மீன்கள் மற்றும் இறால்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
