அரசாங்கத்திற்குச் சொந்தமான தெரிவுசெய்யப்பட்ட 33 அரச நிறுவனங்களைக் கலைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அமைவாக, அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான விசேட பிரிவொன்று கடந்த மார்ச் மாதம் நிறுவப்பட்டதுடன், அதன் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கிடையில், தெரிவுசெய்யப்பட்ட அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான EPF, ETF மற்றும் பணிக்கொடை நிலுவைகளைச் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 5 பில்லியன் ரூபாயில், 2.8 பில்லியன் ரூபாய் 2026 ஆகஸ்ட் மாத இறுதிக்குள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய கிழக்கு மோதல்களால் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, விநியோகத் தடைகள் மற்றும் கட்டளைகள் இரத்துச் செய்யப்படுதல் உள்ளிட்ட சவால்களை அரச நிறுவனங்கள் எதிர்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தச் சவால்களுக்கு மத்தியிலும், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 51 முக்கிய அரச நிறுவனங்கள் மொத்தமாக 259.3 பில்லியன் ரூபாய் இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
