விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகிதவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!


முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணையொன்றின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வங்கிக் கணக்குகளை முடக்குவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கடிதத்தை ஒப்படைப்பதற்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நாவலையில் அமைந்துள்ள ரகித ராஜபக்ஷவின் வீட்டிற்குச் சென்றுள்ளது.

எனினும், அதிகாரிகள் அறிவித்தலை ஒப்படைக்கச் சென்றபோது ரகித ராஜபக்ஷ வீட்டில் இருக்கவில்லை என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment