ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விசாரணை: நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்!

 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (27) ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு கடந்த 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ஷவை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் விசாரணைக்காக அவர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்

Post a Comment