இலங்கையில் விண்கல் பொழிவைக் காண அரிய வாய்ப்பு

 

விண்கல் பொழிவை இலங்கையர்கள் தெளிவான வானில் அவதானிக்க முடியும் என மொரட்டுவையிலுள்ள ஆர்த்தர் சி கிளார்க் விண்ணியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் இலங்கையர்கள் விண்கல் பொழிவினை அவதானிக்க முடியும் என அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த விண்கல் பொழிவு ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் நிகழ்கிறது. 

ஹேலிஸ்; வால்வெள்ளி ((Halley’s Comet) சூரிய மண்டலத்தைக் கடந்து செல்லும்போது விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறிய பாறைத் துகள்கள் காரணமாக இந்த நிகழ்வு ஏற்படுகின்றது. 

இந்தத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது எரிந்து, வானத்தில் ஒளிரும் கோடுகளாகத் தோற்றமளிக்கின்றன.  

இந்தத் துகள்கள் வினாடிக்கு தோராயமாக 66 கிலோமீட்டர் வேகத்தில் வளிமண்டலத்திற்குள் நுழைந்து, பொதுவாக 'விண்கற்கள்' அல்லது 'எரிநட்சத்திரங்கள்' என்று அழைக்கப்படும் நிகழ்வை உருவாக்குகின்றன.

மையத்தின் கூற்றுப்படி, தெளிவான இரவுகளில், நள்ளிரவுக்குப் பிறகும், குறிப்பாக விடியற்காலை நெருங்கும் நேரங்களிலுமே இந்த விண்கல் பொழிவை மிகச் சிறப்பாகக் காண முடியும்.   

இந்த நிகழ்வைக் காண எந்தவித சிறப்பு உபகரணங்களோ அல்லது தொலைநோக்கிகளோ தேவையில்லை. 

favorable வானிலை நிலவும் பட்சத்தில், வெற்றுக் கண்களாலேயே இந்த விண்கற்களைக் காண முடியும் என்றும் மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment