வெளியே செல்ல வேண்டாம் - கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

 

வங்காள விரிகுடா மற்றும் இலங்கையைச் சூழவுள்ள ஆழமான, ஆழமற்ற கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (27) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவின் மேற்கு–மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள ‘அர்னாப்’ (ORNAB) சூறாவளி மேலும் வலுவடைந்து, மிகத் தீவிரமான சூறாவளியாக மாறியுள்ளது. இது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கிலோமீற்றர் வடகிழக்கில் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூறாவளி நாளை (28) காலை இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையை அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 140 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். அத்துடன், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், ஏற்கனவே கடலில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment