ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி நடைபயணம்! கொழும்பை நோக்கி இன்று இறுதிக்கட்டம்

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பிக்குகள் குழுக்களின் தலைமையில் முன்னெடுக்கப்படும் “ஆடைக்கான நீதி – தேசிய உறுதிமொழி மற்றும் விடுதலை நடைபயணம்” இன்று (15) இறுதிநாள் கட்டத்தை எட்டியுள்ளது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி ஆரம்பமான இந்த நடைபயணம், கடுகண்ணாவ, கேகாலை, வரக்காபொல மற்றும் நிட்டம்புவ ஊடாகப் பயணித்து நேற்று (14) கடவத்தையைச் சென்றடைந்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை கடவத்தையிலிருந்து கொழும்பை நோக்கி மகா சங்கத்தினர் நடைபயணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். 

கடும் மழைக்கு மத்தியிலும் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Post a Comment