வவுனியாவில் சம்பவ இடத்திலே இளைஞன் பலி

 

வவுனியா, செட்டிகுளம் - மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​

மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், அதே திசையில் மெனிக்பாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த துவிச்சக்கரவண்டியும் ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 

இவ்விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் பெரியதம்பனை பகுதியைச் சேர்ந்த அருளப்பன் அருள்ராஜ் என்ற இளைஞரே மரணமடைந்தவர் என தெரியவருகிறது.

​சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment