ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (29) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும்.
குறித்த பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
