அல்லைப்பிட்டியில் இ.போ.சா. பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து - பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு மேலும் இருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற இ. போ. சபைக்குச் சொந்தமான பேருந்தும் முச்சக்கரவண்டிக்கும் இடையிலான விபத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் அதே மார்க்கமாக சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
