அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகள் மீளாய்வு முடிவுகள் 28ஆம் திகதி வெளியீடு
அஸ்வெசும திட்டத்தின் முதலாம் கட்டத்தில் பதிவு செய்த பயனாளிகளின் தகவல்களை மீளாய்வு செய்யும் செயன்முறையின் இறுதி முடிவுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சட்டத்திற்கு அமைய 22 சமூக பொருளாதார காரணிகளின் அடிப்படையில் இந்த மீளாய்வு இடம்பெற்று வருகின்றது. இந்த மீளாய்வு செயன்முறை தற்போது 90% பூர்த்தி அடைந்துள்ளதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பயனாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. 2025ம் ஆண்டு 2,439,917 ஆக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை, 2026 ஆகஸ்ட் நிலவரப்படி 1,251,522 ஆக குறைந்துள்ளது.
இதேவேளை, 2023ம் ஆண்டு முதலாம் கட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் தமது தகவல்களை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் எனவும், புதுப்பிக்க தவறுபவர்கள் அடுத்த ஆண்டு பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் நலன்புரி நன்மைகள் சபை எச்சரித்துள்ளது.
அக்டோபர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவாக முதலாம் கட்டத்தில் 985,283 குடும்பங்களுக்கு 9.12 பில்லியன் ரூபாவும், இரண்டாம் கட்டத்தில் 212,445 குடும்பங்களுக்கு 2.04 பில்லியன் ரூபாவும் என மொத்தம் 11.16 பில்லியன் ரூபா வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. a88c
புதிய பயனாளிகள் பட்டியலை http://wbb.gov.lk இணையத்தளத்தில் அல்லது பிரதேச செயலகங்களில் பார்வையிட முடியும்.
