தேசிய மட்டத்திலான மின்தடைக்குப் பின்னர் மின்தடையை நீக்கும் பணிகள் இன்று (17) மதியம் முதல் பகுதி பகுதியாக நடைபெற்று வருவதாகவும், இன்று மாலை 6.30 மணியளவில் தேசிய மின்கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் தேசிய மின்கட்டமைப்பு தலைவர் (NSO) தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய ரீதியிலான மின்வெட்டு குறித்த அறிவிப்பினை வெளியிட்ட தேசிய மின்கட்டமைப்பு இயக்குநர், மொத்த மின் அமைப்பு பழுது காரணமாக பல மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளதாகப் பரவிவரும் செய்தி அறிக்கைகளையும் மறுத்துள்ளார்.
மின் அமைப்பு செயலிழப்பதற்கு முன்னர் இருந்த அனைத்து நீர்மின் நிலையங்களும் தற்போது இயங்குநிலையில் இருப்பதுடன், தேசிய மின்கட்டமைப்பை மீளமைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
சமூக நெறிமுறைக்கு இணங்க நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு மின் உற்பத்தி நிலையமும் பழுதடைந்ததாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“மதியம் முதல் பகுதி பகுதியாக மின்சாரத்தை மீள வழங்கும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாலை 6:30 மணியளவில் தேசிய மின்கட்டமைப்பை முழுமையாக வழமைக்குக் கொண்டுவர NSO நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் வடக்கின் பல பகுதிகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது
