இலங்கையில் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று (30) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் தலா 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
