மழைக்கு ஒதுங்கிய இடத்தில் நேர்ந்த விபரீதம் - நிலைகுலைந்த குடும்பம்

வவுனியா, செக்கடிப்பிலவு பகுதியில் நேற்று (01) மாலை மின்னல் தாக்கியதில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

செக்கடிப்பிலவு பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை வவுனியாவின் பல பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

இதன்போது, குறித்த இளைஞர் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் இருந்துள்ளார். திடீரென மழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அருகிலிருந்த மரத்தின் கீழ் அவர் ஒதுங்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment