விபத்தில் இளம் பெண் பலி-மோட்டார் ஓட்டி சென்றவர் எடுத்த முடிவு

 

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் தலஹகமுலதுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எஹலியகொடவிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த பெண் எஹலியகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கெட்டஹெத்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் விஷம் அருந்திய நிலையில் எஹலியகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில்  எஹலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Post a Comment