பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டுக் கொலை: மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் கைது!

பொரலஸ்கமுவ, மாலனி புளத்சிங்ஹல மாவத்தையில் உள்ள வீடொன்றில் 74 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 4ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த நபர் மீது கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாகக் கூறப்படும் 29 வயதுடைய சந்தேகநபர், ஹோமாகம பிராந்திய குற்றவியல் விசாரணைப் பணியக அதிகாரிகளால் நேற்று (09) மாகும்புர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடகம, ஹோமாகம பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment