கெப்பிட்டியாகொட சிறிவிமல தேரரின் இறுதிக்கிரியைகள் அரச அனுசரணையில்


அமரத்துவம் அடைந்த இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயத்தின் பிரதம சங்கைக்குரிய தேரரும், கெட்டம்பே இராஜோபவனாராமய விகாராதிபதியுமான அதிவணக்கத்திற்குரிய கெப்பிட்டியாகொட சிறிவிமலாபிதான தேரரின் புனித தகனக்கிரியை அரச அனுசரணையுடன் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2026 ஒக்டோபர் 18ஆம் திகதி அமரத்துவம் அடைந்த தேரரின் புனித தகனக்கிரியை, எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி கெட்டம்பே நகர விளையாட்டு மைதானத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த இறுதிக்கிரியைகளை அரச அனுசரணையின் கீழ் நடத்துவதற்காகப் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment