ஜொயின் அஸ் வேர்ல்ட் வைட்’ (Join Us Worldwide) அமைப்பின் ஏற்பாட்டில், உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு வுல்பெண்டால் மகளிர் உயர் பாடசாலையில் சிறுவர் தினக் கொண்டாட்டமும் ஊடக விழிப்புணர்வு நிகழ்வும் நடைபெற்றது.
இதன்போது, ‘ஸ்கை லங்கா’ ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளர் ஆஷிகா ஃபர்சான் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு ஊடகவியல் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வு உரையாற்றினார்.
எதிர்கால சந்ததியினர் தவறான வழிகளில் செல்வதைத் தடுப்பதுடன், ஊடகவியல் உள்ளிட்ட பயனுள்ள துறைகள் மற்றும் திறன்களை கற்றுக்கொள்வதற்கு மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ‘ஜொயின் அஸ் வேர்ல்ட் வைட்’ அமைப்பின் பணிப்பாளர் எம். எம். ஷாஃபி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி, பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிகழ்வின்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ‘ஜொயின் அஸ் வேர்ல்ட் வைட்’ அமைப்பின் பணிப்பாளர் எம். எம். ஷாஃபி, மேலாண்மைப் பணிப்பாளர் எம். எச். எம். ஃபர்ஹான், இளைஞர் விவகாரப் பொறுப்பாளர் எஃப். நிஸாயா, உறுப்பினர் எஃப். ஷியாமா, ‘கொழும்பு கிங்ஸ் யூத் கிளப்’ அமைப்பின் பொருளாளர் எஃப். ஜைனப், உறுப்பினர் எஃப். ஹக்கீமா உள்ளிட்டோரும், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
