மக்களே மிகவும் அவதானம்-யாழில் ஒருவர் கைது

 

வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொருள் வந்துள்ளதாகக் கூறி, அதனைப் பெற்றுக்கொள்வதற்காக ரூ.305,000 பணத்தை வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு கூறி மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வடக்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment