பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி, முட்டை விலை உயருமா?

சோளம் இறக்குமதிக்கு அனுமதி அளிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் உயரக்கூடும் என விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிடுகையில், விலங்குகளின் தீவனத்திற்காக மெய்சோளத்திற்குப் பதிலாக அரிசியை வழங்குவதால் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி மிக வேகமாகக் குறைந்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், சோளப் பற்றாக்குறை காரணமாக சுமார் 20 சதவீதமான சிறிய அளவிலான உற்பத்தியாளர்கள் இத்தொழிலில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அஜித் குணசேகர சுட்டிக்காட்டினார்.

Post a Comment