3,900 மெற்றிக்ட் தொன் சமையல் ஏரிவாயு கப்பல் ஒன்று இன்று (18) இலங்கை வந்தடையவுள்ளதாக லிட்ரோ காஸ் லங்கா நிறுவனம் (Litro Gas Lanka Limited), அறிவித்துள்ளது.
அந்த நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கப்பல் வந்தடைந்தவுடன் உடனடியாக இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிவாயு கப்பலின் வருகையுடன், எதிர்வரும் மூன்று நாட்களில் மேலதிகமாக 350,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்தைப் பேணும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இன்று (18) உட்பட கடந்த மூன்று நாட்களில் மேலும் 350,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பொதுமக்கள் யாரும் தேவையின்றி எரிவாயு சிலிண்டர்களைக் குவித்து வைத்துக் கொள்ள வேண்டாம் (stockpile) எனவும் லிட்ரோ காஸ் லங்கா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது
