திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகபர்கள் மூவர், தங்களது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரை மாய்த்து கொள்ள முயன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் இன்று (28-10-2026) நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
கைக்குண்டுகளைத் தம்வசம் வைத்திருந்ததாகத் தெரிவித்த சந்தேகத்தின் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த ஐவரும் இன்று 48 மணித்தியால விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஐந்து சந்தேகநபர்களுள் மூவர் நீதிமன்றத்திற்குள் வைத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
